Friday, May 11, 2012

கிருத்துவ நண்பர்களே ....பிளீஸ் இதை படிங்க.

நேற்று ஒரு கிருத்துவ நண்பரை சந்தித்தேன். பென்தொகோஷ்த் என்ற பிரிவை சார்ந்த அவரிடம் சில நேரம் பேசி கொண்டிருந்தேன். முதலில் பொதுவான விஷயத்தை பேசி கொண்டிருந்த நண்பர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் சார்ந்த மதத்தின் பக்கம் திரும்பினார். இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் . நான் எல்லா மதத்தையும் மதிக்கிற ஒருவன். அதானால் தான் அவர் சொன்ன பல செய்திகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.


but  மேலும் அவர் தொடர்ந்த பேச்சு என்னை முற்றிலுமாக முகம் சுளிக்க வைத்தது. இனி அவரும் நானும்...என்ன பேசினோம்...நீங்களே படியுங்கள்.

அவர் : ஜீசெஸ் தான் இந்த உலகத்தை படைத்தார்.
நான் ; ஆனால் அறிவியல் அப்படி சொல்ல வில்லையே? ஹைட்ரோஜெனும் , ஒக்சிஜனும் இருக்கிற டத்தில் நீர் உண்டாகும். நீர் இருக்கிற இடத்தில் ஒரு செல் உயிரிகள் தோன்றும். அந்த ஒரு செல் , பல செல்களாக மாறும். பிறகு மீன் உருவானது. மீன் நிலத்திற்கு வர ஆசைப்பட்டது. முதலை மற்றும் தவளைகளாக பரிணாமம் எடுத்தது. பிறகு விலங்கானது. குரங்கானது. குரங்கின் முதுகு தண்டு நிமிர்ந்தவுடன் அறிவு வந்தது. பிறகு மனிதனாக மாறியது. இப்படித்தான் உலகம் வந்தது.

அவர் ; அப்படி எல்லாம் கிடையாது. அது பொய். ஜீசுஸ் இல்லாமல் அந்த ஹைட்ரஜென் ஒக்சிஜென் ஏது? அறிவியலும் அவர் படைத்தது தான்...

நான் : அப்படி யானால் படைத்து விட்டு என் உலகம் வந்தார்? அடிபட்டார்?. மரித்து போனார்? அறிவியல் அவர் படைத்தது என்றால்...மலை பிரசங்கம் நிகழ்த்தும் போது அனைவருக்கும்  கேட்கும் படி ஒரு மைக் மற்றும் speeker  இதை எல்லாம் படைத்திருக்கலாமே?

(அவரிடம் ஒரு அமைதி)

அவர்: நீங்கள் சத்தியத்தை நோண்டுகிரிர்கள். அது உங்களை துன்பத்துக்குள் கொண்டு விட்டு விடும். ஜீசுஸ் வர போகிறார்...அவரை வணங்குபவர்களை மட்டுமே காப்பாற்ற  போகிறார்...

நான் ; ஏன் அவரை கும்பிடாவிட்டால் காப்பாற்ற மாற்றாரா? இந்த உலகத்தையும் மனிதனையும் படைத்த ஜீசுஸ் ஏன் இப்படி பாகுபாடு காட்டுகிறார்..?
அவர் : (கொஞ்சம் யோசித்தபடி.பேச்சை மாறுகிறார்...) இல்லை அவர் மட்டும் தான் கடவுள். குட் ஸ்ப்ரிட். மற்ற அனைத்துமே டெவில் ஸ்ப்ரிட். சர்ப்பங்கள்.

நான்; அப்படியானால்  இந்து மதத்தை சார்ந்தவர்கள் பாம்பை தான் வணங்குகிறார்கள். அப்போ அவர்கள் டெவில் ஸ்ப்ரிட் யை த்தான் வணங்குகிறார்களா?

அவர்: முகத்தில் ஒரு சிரிப்பு) குட். நல்ல புரிஞ்சுகிட்டிங்க...அவர்கள் பிசாசுகளை வணங்கி , ஜீசுசை பகைத்து விட்டார்கள். அவர்களுக்கு அழிவு நிச்சயம் உண்டு.
நான் : எப்போ?
அவர்: அது தெரியாது...ஜீசுஸ் வந்தவுடன்.கூடிய விரைவில் வர போகிறார். நம் பாவங்களையும்.டெவில் ஸ்ப்ரிட் டையும் அழிக்க போகிறார். அவரை கும்பிடும் நாங்கள் மட்டும் பரலோகம் போக போகிறோம். எங்களை கூடவே அழைத்து செல்வார்.

(இன்னும் என்ன என்னவோ சொல்லி கொண்டு இருந்தார்...தாங்க முடியவில்லை...)

நான் : ஜீசுஸ் மட்டும் தான் கடவுள் என்கிறிர்களே..ஏன்?

அவர்: அவர் மட்டும் தான் மனிதனாக வந்து வாழ்ந்தார்...

நான்: அப்படியானால் புத்தரும் மனிதனாக வாழ்தவர் தானே..அவரும் கடவுள் தானே?

அவர் : இல்லை இல்லை..இவர் மனிதனுக்காக தான் உயிரையே கொடுத்தார். அவர் ரத்தம் ஜெயம்.

நான் : ஜீசுஸ் கடவுள் என்கிறிர்கள். அவரை சிலுவையில் அறையும் போது, அந்த பாவி மனிதர்களை தான் சக்தியை காட்டி பயமுறித்தி..தண்டித்து இருக்கலாமே..ஏன் தேவை இல்லாமல் உயிரை பலி கொடுத்தார். உயிரோடு இருந்தே மக்களை திருத்தி இருக்கலாமே...?

(அவரிடம் இதற்கு சரியான பதில்  இல்லை..)

நான்: உங்கள் ஜீசுசின் போதனைகள் மிகவும் எனக்கு பிடிக்கும். அவர் சொன்ன அறிவுரைகள் ஏற்றுக்கொள்ள வேண்டியவை. அனால் அவரை பின்பற்றுகிற நீங்கள் ஏன் அவர் மட்டும் தான் கடவுள். மற்றவை பிசாசுகள் என்று நல்ல போதனை யாளரின் பெயரை கெடுத்து கொள்கிறிர்கள். அது தவறாக படவில்லையா?
கர்த்தர் மட்டுமே எல்லாம் செய்ய வல்லவர். அவரை பின் பற்றுபவர்கள் பாக்கியசாலிகள் என்று ஏன் தேவை இல்லாத விளம்பரத்தை வெளியிட்டுக் கொண்டிருகிறிர்கள்.?

இப்படியே...அவருக்கு நல்ல விசயங்களை சொல்லிகொண்டிருந்தேன். மொத்தம் மூணு மணி நேரம் ஜீசுஸ் ஜீசுஸ் ஜீசுஸ் தான். அதில் தவறில்லை. அவர் ஜீசுசை பின் பற்றட்டும். தவறில்லை ஆனால் மற்ற மதத்தினரை காயப் படுத்தக் கூடாதே...அல்லவா?

கடைசியில்...

அவர் : நீங்கள் எப்போது ஜீசுஸ் பற்றி பேச அரம்பித்திர்களோ  ..அப்போதே..இயேசு உங்களை அழைத்து விட்டார். நீங்கள் இயேசு வுக்கு பாத்தியமானவர். உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு...வாங்க இந்த சண்டே நம்ம சர்ச்க்கு ...........!!!!!

தலை தெறிக்க ஓடிவந்தேன்........


 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

  1. உண்மை உண்மை. நீங்கள் சொல்லியவை அனைத்தும் உண்மை. கிருஸ்துவர்கள் பெரும்பாலும் பிற மததுவேசம் செய்கிறார்கள்....

    ReplyDelete