Friday, May 31, 2013

ஆயிரம் ரூபாய்.....



என்றைக்குமே இல்லாமல் அன்றைக்குத்தான் எனக்கு ஞாபகம் வந்தது. “நீங்கள் எதற்கும் கால பைரவரை தரிசியுங்கள். ஆறகழூர் சென்று வாருங்கள். தோசங்களை நீக்கிவிடும் அற்புதமான தலம், பைரவனின் காலடியில் சரணாகதி அடைந்துவிட்டால், அதற்கு மேல் வருகின்ற துன்பங்களை அவன் பார்த்துக் கொள்ளுவான்” என்று எனக்குத் தெரிந்த சோதிடர் சொன்ன விசயம்  .

அன்றைய தினம் எனக்கு அப்படித்தான் தோன்றியது. மனைவியோடும், குழந்தை தியானாவோடும் காரில் கிளம்பிவிட்டேன். என்னவோ அன்றைக்கு பைரவரை தரிசித்தே ஆக வேண்டும் என்ற ஒரு இனம் புரியாத வேட்கை எனக்குள் கிளம்பியிருந்ததை என்னால் அறிய முடிந்தது.

பொதுவாகவே நான் சிவனை, சித்தர்களை அதிகம் வழிபடும் பக்தனாகியால், பைரவரைப் பற்றியும் கொஞ்சம் நான் தெரிந்து வைத்திருந்தேன். இன்றைக்கும் உண்மையான பக்தனுக்கு பைரவன் ஏதாவதொரு வகையில், தான் அவன் பக்கத்தில் வந்திருப்பதை உறுதி செய்வான் என்று மற்றவர்கள் சொல்லி கேட்டும், படிததும் இருக்கிறேன். ஆனாலும் அவன் சந்நதியில், என் கண்முன்னே நடந்த நிகழ்ச்சி என் கண்களையே நம்ப முடியாததாக இருந்தது. அன்று முதல், இறைவன் எப்போதும் தன் பக்தர்களை கைவிடுவதும் இல்லை. எப்பொழுதும் பக்தர்களின் அருகிலேதான்; இருக்கிறான் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

சிவபெருமான் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை. ஆனால், தேவைப்படும்போது தனது சக்தியை அனுப்புகிறார். அப்படி சிவனின் மனதிலிருந்து உருவான சிவசக்தியே பைரவர் ஆவார். நவக்கிரகங்களை தனது காலச் சக்கரத்தால் இயக்கிவருபவர் பைரவரே! பெரும்பாலான சிவாலயங்களில் காவல் தெய்வமாக இருப்பவர் பைரவர் ஆவார். 

பைரவர் ஈசனின் பல்வேறு வடிவங்களில் மிக முக்கியமானவர். இவரே கோயில்களின் பாதுகாப்புக்கும் உரிய கடவுள் ஆவார். ஈசன் கோயில்களை பைரவரே காத்து வருவதாக ஐதீகம். முன்காலங்களில் கோயில்களைப் பூட்டிச் சாவியை வெளிப் பிராஹாரத்தில் காணப்படும் பைரவர் சந்நிதியில் வைத்துவிடுவார்களாம். பைரவர் தன் வாகனமான நாயுடன் கோயிலைச் சுற்றி உலா வந்து கொண்டிருப்பார் என்றும், பலர் கண்களிலும் பட்டிருக்கிறார் என்றும் கூறுவார்கள். சிதம்பரத்தில் பைரவர் தனம் தருபவராக இருந்திருக்கிறார். தில்லை வாழ் அந்தணர்கள் தங்கள் பிழைப்புக்குப் பணமோ, பொருளோ இல்லாமல் வருந்த,  ஈசன் பைரவருக்கு ஆணையிட ஒவ்வொரு நாளும் இரவில் பைரவர் பொற்காசுகளை நடராஜர் சந்நிதியில் வைத்து விடுவார் என்றும், அதைக் காலையில் அன்றாட வழிபாட்டுக்கு வரும் தீக்ஷிதர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வார்கள் என்றும் சிதம்பரம் வாழ் தீக்ஷிதர்கள் கூறுவார்கள்.

பைரவர் என்றாலே பயங்கரமான ஆள் என்றே அர்த்தம். பாதுகாவலர் என்பதால் பெண்கள் இவரை வழிபட்டால் பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்து காத்துவருவார். வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே இவரும் உறுதியாகத் தன் காவல் வேலையைச் செய்து வருவதால் சில இடங்களில் இவர் வைரவர் எனவும் அழைக்கப் படுகிறார்

சேலத்தை ஒட்டிய ஆறகழூரில் இருக்குறது அந்த ஆச்சிரியமான தலம். எனக்குள் ஆனந்த கண்ணீரை வரவழைத்த அரியத்தலம். அஸ்டபைரவர்களோடு அமைந்திருக்கும் அற்புத தலம்.

இந்த தலத்திற்குள் செல்வதற்கு முன், கோவிலுக்கென்று இருக்கும் வரலாறு என்னவென்று பார்த்து விடுவோம்.

முன்னொரு காலத்தில், சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவரின் விருப்பத்தை நிறைவேற்ற, பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது. 

பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டி முடித்தான் என்பதுதான் இந்த கோவிலின் வரலாறு.

இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை "காயநிர்மாலேஸ்வரர்' என்கின்றனர். "காயம்' என்றால் உடல், "நிர்மலம்' என்றால் பரிசுத்தம் என்று பொருள். அது மட்டுமல்லாமல் இந்த இடம் காமனுக்கு இறைவன் காட்சிக் கொடுத்த இடமாகியால் காமநிர்மலேஸ்வரர் என்றும் இறைவன் அறியப்படுகிறார்..  அக்னி தலமான இங்கு கற்பூர ஆராதனையின்போது, லிங்கம் பிரகாசமான ஜோதி வடிவில் காட்சி தருகிறது. தன்னை வணங்குபவர்களுக்கு முடிவிலாத ஆனந்தத்தை வழங்குவதால், சுவாமிக்கு "அனந்தேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. அண்டத்தை படைத்து, நம்மையும் படைத்து பெயர்; கூற முடியாத பல ஆச்சிரியங்களை உண்டாக்கும் இறைவனுக்கு, நாம் வைத்த பெயர்கள் தான்  எத்தனை எத்தனை,?

இந்த ஆலயத்தில் தான் நான் சொன்ன அந்த எட்டு பைரவர்களும் ஒரே இடத்தில் அமைந்திருக்கிறார்கள்.

மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு இறைவனை தரிசிக்கும் ஆவலோடும், பைரவனின் சித்து விளையாட்;டை காணும் ஆவலோடும் உள்ளே நுழைந்தோம்.
பழைய கோவில் என்பதை அந்தக்கால தூண்கள் நமக்குச் சொல்லாமல் சொல்லியது.

முதலில் நம்மை வரவேற்றது தலையாட்டி பிள்ளையார் தான்.
ஒரு பக்கம் தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி நம்மை ஆசிர்வாதம் செய்துக் கொண்டே சிரிப்பது போலிருந்தது அந்த சிலை.

அந்த மன்னன் கோயிலை கட்டியபோது இவரிடம் உத்தரவு கேட்டுவிட்டுத்தான் பணியை துவங்குவானாம்;. ஒருமுறை கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து "பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?' என்று கேட்டானாம் மன்னன். அதற்கு இவர், "நன்றாகவே கட்டியிருக்கிறாய்' என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவேதான் இவருக்கு "தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்ததாக சொல்லுகிறார்கள். 
பிள்ளையாரை மணமுருக வணங்கிவிட்டு, அடுத்ததாக நாம் சென்ற இடம் அஸ்டபைரவர்களில் முதலாவதாக இருக்கும் கால பைரவர். இவர் இந்த கோவிலின் கோபுரத்தில் குடியிருக்கிறார். கீழேயே நின்றபடி அவரை வணங்கினோம்.

இரண்டாவதாக இருப்பவர் குரோதான பைரவர், இவரின் சந்நிதி நுழைவாயிலின் இடதுபுறத்தில் அமைந்துள்ளது

மூன்றாவதாக அசிதாங்க பைரவர். இவர் மூலவருக்கு இடது பக்கத்தில் எழுந்துள்ளார்

நான்காவதாக சண்ட பைரவர் ஆலயத்தை வலம் வரும்போது  நவக்கிரகத்தின் பின்புறம்  அமைத்துள்ளார்கள் 

ஐந்தாவதாக பீஷண பைரவர் இந்த  5வது பைரவர் கோவிலுக்கு வெளியே மதில் சுவற்றுக்குள் வலது பக்கத்தில்  8 தூண்கள் மேல் அமைந்த திறந்த வெளி  மணடபத்தின் நடுவில் அமைந்துள்ளது .மேலும் இந்த 8 தூண்களும் 8பைரவர்களை குறிப்பதாகவும்  இங்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் 8 பைரவர்களை வ்ணங்கியதற்கு சமம்  

ஆறாவதாக உன்மந்த பைரவர், ஏழாவதாக காலசம்ஹார பைரவர், கடைசியாக ருத்ர பைரவர் என்று அனைத்து பைரவ கடவுள்களையும் தரிசித்துவிட்டு, மனதிலிருந்த குறைகளையும் கவலைகளையும் அவன் காலடியில் கிடத்திவிட்டு, ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியோடு அந்த ஜோதி லிங்க சிவனையும், அம்மன் பெரியநாயகியையும் வணங்கிவிட்டு, சற்று நேரம் கண்களை மூடி பைரவனையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

இன்றோடு நான் பட்ட துயரங்களை நீ எடுத்துக் கொண்டு, இனிமேலாவது என்னை மகிழ்ச்சியோடு வாழச் செய் என்றபடி மனமுருக வணங்கிக்கொண்டிருந்தேன். பிறகு கண் விழித்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த மகள் தியானைவை மீண்டும் மீண்டும் சென்று பிடித்துக் கொண்டிருந்தேன்.

என் மனைவியோ “சரி புறப்படுங்கள் நேரமாகிவிட்டது” என்றபடி எழுந்தாள். நானும் மகளை தூக்கியபடி நேராக கொடிமரம் இருக்கிமிடத்தில் வந்தேன். 
மனமுருக மீண்டும் பைரவனை வணங்கிக்கொண்டு நானும் மகளும் சாஸ்டாங்கமாக கொடிமரத்தினருகே விழுந்து வணங்கினோம்.

அப்போதுதான் அந்த அதிசியம் நடந்தது.

எங்கேயோ ஒரு புதையல் இருப்பதை நான் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு…
எனக்குள் ஏதோ ஒரு புது சக்தி இறங்குவது போன்ற ஒரு சொல்ல முடியாத அதிர்வு.

எழுந்தேன். கொடிமரத்தின் அருகே இருக்கும் ஒரு தூண் அருகே மீண்டும் மகள் ஓடுகிறாள். நான் ஓடிச் சென்று பிடிக்கும் போதுதான் கீழே இருக்கும் ஒன்றை  கவனித்தேன்.

ஆம்….அது புத்தம் புது மடிப்பே இல்லாத ஆயிரம் ரூபாய்.


பலபேர் வந்து போகும் அந்த இடத்தில், மற்றவர்கள் கண்ணில்  படாத இந்த பணம், என் கண்ணில் மட்டும் பட்டதிற்கு என்ன காரணம்,?

அதுவும் புத்தம் புது சலவை நோட்டு….யாரோ அப்போதுதான் அதை போட்டுவிட்டு சென்றது போல இருந்தது.

எடுத்தேன். என்றாலும் எனக்குள்ளே ஒரு குற்ற உணர்வு. ஆம்…இது என் பணம் இல்லை. இறைவன் என்னை சோதிப்பதற்காக அவன் போட்ட பணம். அவன் சொத்து. பைரவன் என்னை பதம்பார்க்கிறான். 

பணத்தை நேராக எடுத்துச் சென்று இறைவனின் உண்டியலில் செலுத்தியபடி ஆனந்த கண்ணீரில் நனைந்தபடி சொன்னேன்.

“இறைவா…என்னை நீ சோதிக்க….எனக்காக இந்த இடத்தில் வந்திருப்பதை நினைத்து நான் மகிழ்கிறேன். நாயினும் கீழோன் நான். என்னை பார்ப்பதற்காக வந்த இறைவா…இது ஒன்று போதும்…நீ எப்போதும் நான் கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என்பதை உணர்த்தியதற்காக…. நன்றி பைரவா…..”
என்றபடி அதிர்ச்சிகளை தாங்கிக் கொண்டு, ஆனந்தத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, May 28, 2013

சட்டத்தின் படி (கடைசி)



தியாகு வந்துக் கொண்டே என்ன தமயந்தி திருடன் வந்தாக்கூட தெரியாத அளவுக்கு computer ல் என்ன தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்?

அதுதான் திருடனை பிடிக்க நீ இருக்கியே. அசிஸ்டன்ட் கமிசனர் சார் என்றாள் தமயந்தி.

ஹலோ ஏசி வாங்க என்றான் எழில். 

நான் என்னைக்குமே இந்த வீட்டுக்கு தியாகுதான்.
ஓகே ஓகே என்று தமயந்தி முடிப்பதற்குள்,

ராசாத்தி, முத்து திவாகரன் உள்ளே வந்தபடியே 
குட். அந்த ஓகே என்பதைதான் உன்னிடம் எதிர்பார்க்கிறோம்.

தியாகு திவாகரன் மகன் எழில் தமயந்தி மூவரும் திடுக்கிட்டு பார்க்க திவாகரன் தொடர்ந்து, “அம்மா தமயந்தி சுத்தி வளைக்காம நேரடியாக கேக்கிறம்மா…உன் அம்மாவுக்கு தியாகுவை மாப்பிள்ளையாக ஆக்கிகொள்ள விருப்பம். அதிலும் நியாயமிருக்கு. முத்து தன்  சொந்த சகோதிரியாக நினைத்து உன் அம்மாவையும் பாதுகாத்ததுதான்.

உன் அப்பாவின் இந்த உயர்வுக்கு நான்தான் காரணமென்று நினைப்பதால் என் மகனை மாப்பிளையாக்க அவர் ஒருவேளை விரும்பலாம். அது மட்டுமல்ல. உன்னுடைய நடை உடை பாவனை செயல்பாடு அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தது. ஆகவே உன்னை என் மருமகளாக ஆக்கிக் கொள்ள எனக்கு விருப்பம். இனி உன் இஸ்டம். எழி;ல் நீ என்னப்பா சொல்றே?”

தியாகு என்னப்பா சொல்லற ? என்றாள் ராசாத்தி.

எங்க ரெண்டு பேரையும் விடுங்க. தமயந்தி நீ என்ன சொல்லறே, எந்த ஒளிவுமறைவுமில்லாமல் சொல்லு…

சின்ன வயதிலிருந்தே நானோ அல்லது தமயந்தியோ அப்படியொரு எண்ணத்தில் வளரவில்லை. பெரியோர் விருப்பம் என்னவோ அது எனக்கு ப+ரண சம்மதம். என்றான் தியாகு.

என்னம்மா தமயந்தி உன் முடிவு என்னம்மா, இல்ல வேறு எதாவது…யாரையாவது பயப்பட வேண்டாம். நான் நிச்சயமாக வருத்தப் பட மாட்டேன். என்றாள் திவாகரன்.

திடுக்கிட்ட தமயந்தி ஐயா என்னை மன்னிச்சிடுங்க. எங்க அம்மா என்னையோ தியாகுவையோ அப்படி வளக்கல. நாங்க ரெண்டு பேரும் குடும்ப கஸ்டத்தை உணர்ந்து படிச்சவங்க. பெரியவங்க முடிவே என் முடிவு. என்று கொஞ்சம் வெக்கத்துடன் சொன்னாள் தமயந்தி.

அட கடவுளே இதற்கு முடிவே இல்லையா, என்று பெருமூச்சுவிட்டார் திவாகரன்.

நீண்ட அமைதிக்கு பின். திவாகரன் மகன் எழில்….

அப்பா…என்னை மன்னிச்சிடுங்க. பெரியவங்க எடுக்க வேண்டிய முடிவை நான் சொல்றதுக்கு….

தமயந்திக்கு தியாகுதான் பொருத்தமான மாப்பிள்ளை. சின்ன வயதிலிருந்து ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொண்டவர்கள். மேலும் எனக்கு அம்மாவின் பாசம் என்னென்னே தெரியாது. தங்கை பாசம் தெரியாது. அந்த உறவின் நிழலில் வாழ நான் ஆசைப்படறேன்.

இன்று முதல் தமயந்தி என் சொந்த தங்கை. என்னம்மா என்னை மகனா ஏற்றுக் கொள்வீர்களா? என்:று ராசாத்தியின் காலில் விழ போனவனை அள்ளி தூக்கி நிறுத்தி எழில் நீ எனக்கு கடவுள் கொடுத்த சொந்த மகனப்பபா…என்றபடி ஆனந்த கண்ணீர் வடித்தாள் ராசாத்தி.

அப்பறமென்ன பெரியோர்களே சீக்கிரம் நாள் குறிங்க. என்று சொல்லியபடி துள்ளி குதித்து ஓடினாள் தமயந்தி.
எல்லோரும் ஒரே சப்தமாக…

அடி கள்ளி…. என்றனர்.





நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, May 22, 2013

Current affairs of 2012-2013 new

For free download


Click here


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, May 19, 2013

சட்டத்தின் படி - விறவிறுப்பான தொடர்கதை (28)

திருப்பூர்  ரயில்வே ஸ்டேசனில் முத்துவும் தியாகுவும்

டியுட்டியில் ஜாயின் பண்ணிட்டு அந்த டிரஸ்சோடு போனா அத்தையும் தமயந்தியும் ரொம்ப சந்தோசப்படுவாங்க..என்ன சொல்லற தியாகு?
ஆமாப்பா..சரி வாங்க ஹெட் கோட்டரஸ் போலாம்.

கோவை விமானநிலையத்தில் திவாகரனும் அவர் மகனும்,

என்னப்பா நம்மள ரிசீவ் பண்ண ஒருத்தரும் வரல?

நான்தான் வேலுக்கிட்ட சொன்னனே….திடிர்ன்னு ஒருநாள் சர்ப்பரைசா வருவோம் ன்னு…

டேக்சியை அழைத்து லக்கேஜ்டன் வேலு பங்களாவை நோக்கி கார் சென்றது.
அங்கே மயங்கிக் கிடந்த ராசாத்தியின் முகத்தில் தண்ணீர் தெளித்து, சுய நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்;துக் கொண்டிருந்தார்கள் அங்கேயிருந்த வேலையாட்கள்.

மயக்கம் தெளிந்த ராசாத்தி  அலங்கோலமான நிலையில் இருந்த தமயந்தியை கட்டிக் கொண்டு, செய்வதறியாமல் சொல்வதறியாமல் பெருமூச்சோடு அழுதாள்.

“தமயந்தி இவர்தாம்மா உங்க அப்பா”

அதிர்ச்சியின் உச்சத்திலிருந்த தமயந்திக்கு தாங்க முடியாத ஆச்சரியம்.

“என்ன சொன்னீங்க அம்மா?”

தங்கையும் அண்ணனுமாக இருந்து, மகிழ்ச்சியின் தோட்டத்தில் மயங்கிக் கிடக்க வேண்டிய குடும்பம் இன்றைக்கு தாறுமாறாய் ஆனதற்கு காரணம் நான் தானே என்று எண்ணி வெதும்பி கொண்;டிருக்கும் வேலுவை அப்பா என்று அழுதுக்கொண்டே கட்டி பிடித்துக் கொண்டாள் தமயந்தி.

வாழ்த்துக்கள் தியாகு உங்கள் கடமையில் கண்ணியமும் நேர்மையும் இருக்க மீண்டும் வாழ்த்ததுக்கள் இந்த யுனிபார்மில் நீதி நேர்மை நியாயம் நிறைந்து இருக்க வேண்டும்.

அப்பொழுது போன் அலறுகிறது.

குட்மார்னிங் சார் சொல்லுங்க….

மறுமுனையில்…

ஐயொ நீங்களா? ஓமை காட்….ஓகே சார். டி எஸ் பியை அனுப்பறேன். மிஸ்டர் தியாகு உங்களுக்கு முதல் கேஸ் ஏட்டு ரைட்டர் போலிஸை கூட்டிக்கொண்டு வேலு பங்களாவுக்கு போங்க.

திவாகரனும் மகனும் வேலுவின் பங்களாவில் வழக்கத்திற்கு மாறாகயிருப்பதை கண்டு, செக்யுரிட்டியிடம் விசாரித்து கேட்டறிந்துக் கொண்டனர்.

உள்ளே சென்று பதைபதைப்போடு சோகமே உருவாக அமர்ந்திருந்த வேலுவின் கையைப் பிடித்தபடி என்ன வேலு?

ஐயா வந்து ……நடந்து முடிந்த தன் சொந்தகதை அனைத்தையும் சொல்லி முடித்தான் வேலு.

டி எஸ் பி தியாகு மற்றும் காவலர்கள்…இப்போது பங்களாவில்..

யுனிபார்மில் தியாகுவை பார்த்த ராசாத்தியும் தமயந்தியும் திடுக்கிட்டனர்.
இவர்கள் இருவரையும் பார்த்த தியாகு ஒருகணம் அதிர்ச்சியடைந்தபடி நின்றான்.

வாங்க சார்…நான் தான் இந்த கொலையை பண்ணினேன்.என்னை அரெஸ்ட் செய்யுங்க.

அவசரப்படாமல் நடந்ததை நிதானமாக சொல்லுங்க…..வேலு சொன்னதை அப்படியே எழுதிக் கொண்டார் ரைட்டர்.

அரவிந்த இருந்த இடத்தை ஆய்வு செய்த பின், பிணத்தை போஸ்ட் மார்ட்டத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு இன்ஸ்பெக்டர்; ஒருவருக்கு சிக்னல் காட்டினார்.

அதை தொடர்ந்து காவலர் ஒருவர் விலங்கை கொண்டு வந்தார்.

பதறிப்போன ராசாத்தி தியாகு இவர் யாருமில்ல என் புருசன். தமயந்தியோட அப்பா…

அதுதான் அவர் வாக்குமூலத்திலேயே சொல்லிடடாரே…அத்தே தன் மகளை தன் கண்முன்னால் கூடப்பிறந்தவன் கற்பழிக்க முயற்சி செய்தவனை கொன்றிருந்தாலும், சட்டப்படி குற்றமில்லைதான். என்றாலும் இங்கே நியாயப்படி குற்றம் செய்த குற்றவாளி.

எனக்கு உறவு முறையாகிறது. கடமையைக் கருத்தில் கொண்டு நீதீ வழங்க கோர்ட்டை நான் நாடுவரை தவிர வேறு வழியில்லை. நிச்சயம் இவருக்கு தண்டனைக் கிடைக்காது.. என்னை நம்புங்க…

சார் உங்களுக்கு விலங்கு தேவையில்லை. உங்கள் காரிலேயே உங்க முதலாளிக் கூட வரலாம்.

ஓர் இடத்தில் முத்துவைக்கண்ட ராசாத்தியும் தமயந்தியும் ஓடிச்சென்று கட்டிபிடித்து ஓவென அழுதனர்.

கோர்ட் குற்றம் சுமக்கப்பட்டவரின் வாக்கு மூலத்தை வைத்து தங்கை யென்றும் பாராமல,; தவறு செய்த காம கொடூரனைக் கொலை செய்த வேலுவை சட்டப்படி குற்றவாளியில்லை என தீர்மானித்து விடுதலை செய்கிறது.

வேலு திவாகரன் ராசத்தி தமயந்தி முத்து தியாகு திவாகரன் மகன் சில மாதங்கள் கழித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள்.

திவாகரன் வேலுவையும் ராசாத்தியையுமு; தனியே அழைத்து, எல்லாம் கெட்டக் கனவா நினைச்சுக்Nகுhங்க..என்று ஆரம்பித்து,

வேலு நான் உங்கிட்ட சொல்லனும்ன்னு நினைச்சேன்.அதை சொல்லலாமா?
என்ன முதலாளி …எதுவாயிருந்தாலும் நீங்க என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்….?

இல்ல..தமயந்தியை…என் மகனுக்கு…கல்யானம் பண்ணி வைச்சரலாமா? ன்னு……

வேலுவும் ராசாத்தியும் இதைக் கேட்டு திடுக்கிட்டு…ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்….

தன்னை இந்;த உயர் நிலைக்கு கொண்டு வந்தவர்க்கு இதைவிட நன்றிக் கடன் வேறு என்ன செய்ய முடியுமு;. இருந்தாலும் ராசாத்தி அவளை எவ்வளவு கஸ்டப்பட்டு வளர்த்திருப்பாள். முத்துவை சொந்த அண்ணனாக ஏற்றுக் கொண்டவள். ஒரு வேலை முத்துவின் மகனுக்கு என்ற யோசனையில் இருந்தான் வேலு…

ஐயோ என்ன சொல்லறது. யாருமற்ற அனாதையாக சாக போனவனை காப்பாற்றி அண்ணன் என்ற முறையை தவிர எந்த கெட்ட எண்ணமுமில்லாத அவர்..ஒருவேளை தமயந்தியை தன் மருமகளாக்க எண்ணியிருந்தால்…..என்று யோசித்தபடி இருந்தாள் ராசாத்தி…

என்ன ரெண்டு பேரும் ரொம்ப நேரமா யோசனை பண்ணறீங்க…?

அப்பொழுது முத்து அங்கு வந்தான். திவாகரனிடம் முத்து “முதலாளி மன்னிக்கனும் நீங்க பேசிட்டு இருந்ததை நானும் கேட்டுட்டுத்தான் இருந்தேன்.

நானும் அதைத்த்தான் யோசித்து வைத்திருந்தேன் முதலாளி. வாழப் போறவ தமயந்தி…அவளை ஒரு வார்த்தை கேட்டிடுவோம்….

தமயந்தியும் திவாகரன் மகனும் ஆபிஸ் விசயமாக டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தியாகு வந்துக் கொண்டே திருடன் வந்தாக் கூட தெரியாதவர்களாக அப்படியென்ன டிஸ்கஸன்?

இன்னும் பல அதிர்ச்சிகரமான திருப்பங்கள் காத்திருக்கின்றன…..அதிர்ச்சிகள் தொடரும்….
 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, May 14, 2013

பாசம்



காதலுக்கும் பாசத்துக்கும் அணுவளவு வித்தியாசம மட்டும் தான்.

காதலில்லாமல் ஒருவன் வாழ முடியும். ஆனால் பாசமில்லாமல் யார் மீதும் பாசம் வைக்காமல் வாழ்க்கையை எண்ணி பார்க்கவே முடியாது

அது ஆத்மார்த்தமான உயிரில் கலந்த அத்வைதம். உற்றார் உறவினரோடும், உடன் பிறந்த ரத்தங்களோடும், கடைநிலை காரியத்திற்கும் ஓடிவரும் உள்ளார்ந்த நண்பனோடும் இணைப்பதுதான் பாசம் என்கிற வடம்.

இது இன்றைக்கு அறுபட்டதன் விளைவாகத்தான், உறவுகள் நம்மை விட்டு வெகுதூரம் சென்று விட்டன.

பணத்தால், பகட்டால், பொறாமையால், இன்றைக்கு பலபேரும் உறவுகளை இழந்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

குடும்ப அமைப்பு சிதைந்து போய், சின்னாபின்னமாகி, சூறாவளிக் காற்றில் பறந்து போன காகிதமாய் கண்ணுக்குத்; தெரியாமல் மறைந்துதான் போய் விட்டது.

இராமன் வனவாசம் போன பிறகு தம்பி லக்குவணும், அண்ணனுடன் சுகவாழ்வை துறந்து, வன வாழ்வை துணிந்தான். இராமரின் அத்துணை சுக துக்கங்களிலும் கடைசிவரை துணை நின்றான். அண்ணன் பட்ட துயரையெல்லாம் தன் பாசக்கரங்களால் துடைத்து விட்டான்.

சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்திருக்க வேண்டிய பரதனும், மரவுடை தரித்து “எனக்கா இந்த ராஜ வாழ்ககை? அண்ணனுக்கு  முடி மாலை சூட்ட வேண்டிய மலர்கள் என் மீதா,? ஏற்றுக்கொள்ள மாட்டேன்…இராமனுக்கு மட்டும் தான் இந்த அரியணை. நான் பெற்றால் அது பாவம்” என்று அண்ணன் போன கால் தடங்களை தேடி தேடி, அவனுடன் சேர்ந்து வாழச் சென்றவன்தானே பரதன்.
இராமயணத்தில் கையேகி முதல் குகன் வரை, ஆரம்பம் முதல் முடிவு வரை பாசம் என்ற அஸ்திவாரம் நன்றாக போடப்பட்டிருக்கிறது.

அதனால்தான் குடும்ப அமைப்பு என்கிற சமுதாய முதுகெழும்பு, இந்தியாவில் மட்டும்தான் உறுதியாய் நிலைத்திருக்கிறது.

இப்போது அந்த முதுகெழும்பு பாவம, பக்கவாதம் வந்து படுத்தே கிடக்கிறது. பணம் சேர்க்கும் ஆசை வந்த காரணத்தால், மனம் விட்டு பேசுவதற்கு இங்கே உறவுகளுக்கு நேரமில்லை. உடல் நலம் விசாரிக்க தந்தையிடம் மகனுக்கு நேரமில்லை. மகனிடம் பசியை பற்றி கேட்க தாய்க்கு நேரமில்லை. 

புகுந்த வீட்டின் சௌரியங்களை அக்காவிடம் கேட்பதற்கு பொறுமையில்லை. தங்கையின் திருமணம் நாள்குறிக்க அண்ணனுக்கு கவலையில்லை.

ஏதோ ஒரு வயிற்றில் பிறந்ததற்காக மாதமோ அல்லது பண்டிகைக்கோ வந்து, சொந்தங்களை எட்டிபார்ப்பது என்பதுதான் அவசர வாழ்க்கையில் எங்கும் நிறைந்திருக்கிறது.

உறவுகள் காயப்பட்டு வெகு நாளாகிவிட்டது. குடும்ப வேர் ரணம் வந்து மெதுவாக அழுகிக் கொண்டே இருக்கிறது, என்றைக்கு வேண்டுமானாலும் மரம் பட்டு போகலாம். கெட்டும் போகலாம்.

வேரோடு சாய்ந்த பிறகு பச்சை கிளிகள் கூடுகள் கட்ட வில்லையே என்ற கவலைப்பட்டால், இது அந்த மரத்தின் பொறுப்பல்ல.

மனிதப்பிறப்பின் நோக்கமே பாசத்தின் வலிமையை அறிவதுதான்.

தன் குடும்பத்தாரிடமே அதை வெளிக்காட்டாததின் விளைவுதான் பிளவுப்பட்ட சமுதாயத்தின் அடித்தளம்.

சகோதர பாசம் சொத்துக்காய் செத்துப்போகிறது.

அண்ணன் தானே என்று தம்பியும,; தம்பிதானே என்று அண்ணனும் விட்டுக் கொடுக்க அவர்களின் இதயம் இன்றைக்கு விட்டுக்கொடுப்பதில்லை.
ஓருமுறை நபியின் பேரன்கள் உசேனும், உசைனும் சண்டை போட்டுக் கொண்டு சில நாட்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தாhர்கள். அவர்களுடைய தாயாருக்கு இது மிகவும் கவலையளித்தது,

அண்ணனை கூப்பிட்டு சொன்னார். இப்படி தம்பியிடம் பேசாமல் இருப்பது இஸ்லாமிற்கு செய்கிற துரோகம்.

குரானிலே சொல்லப்பட்டு இருக்கிறது இப்படி… “ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடம் 3 நாட்களுக்கு மேல் பேசாமல் இருந்தால் அது மிகப்பெரிய குற்றம். அது தெரியாதா?” என்று கேட்டார்.

அதற்கு அந்த உசேன் சொன்னான். “தெரியும்மா…ஆனால் அதே குரான் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறது. சண்டை போட்டவர்களில் எவன் முதலில் பேசுகிறாhனோ அவனுக்கே இறைவன் அருள் முழுவதுமாகக் கிடைக்கும். என்று. அதனால் என் தம்பி முதலில் பேசி அவனுக்கே அல்லாவின் முழு அருளும் சென்று சேரட்டுமே என்று காத்திருந்தேன் அம்மா. இது தவறா?” என்றான்.

இன்னொரு கதையும் உண்;டு. ஒரு முறை கோசலையின் மடியில் இராமன் சந்தோசமாக வந்து அமர்ந்தான்.என்ன இவ்வளவு மகிழ்சிசியாக இருக்கிறாய் என்றாள் கோசலை. இன்றைக்கு நானும் தம்பி பரதனும் சொக்கட்டான் விளையாட்டு விளையாடினோம். அவன் வென்றுவிட்டான். அதனால் சந்தோசமாக இருக்கிறேன். என்றான் இராமன்.

அப்போது பரதன் அங்கே சோகமாக முகத்தில் கவலை தோய்ந்து விம்மிக் கொண்டே வந்தான்.

ஏன் என்ன சோகம் என்றாள் அதே கோசலை.

அதற்கு பரதன் சொன்னான். நானும் அண்ணன் ராமனும் இன்று சொக்கட்டான் விளையாட்டு விளையாடினோம். அண்ணன் நான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விட்டுக் கொடுத்து விளையாடி தோற்றுவிட்டான். அதுதான் காரணம்.

பார்த்தீர்களா, படிக்கின்ற போதே நமக்குள்ளே ஒரு சிலிர்ப்பு. மீண்டும்ட ஜனித்ததுபோல் ஒரு உயிர்ப்பு.

இந்த சகோதர பாசத்தின் அடிநாதம்தான் இந்த இந்திய  காவியங்களான மகாபாரதத்திற்கும்,இராமயணத்திற்கும் அடித்தளம் என்பதை நினைவில் வையுங்கள்.

இந்த பாசம் மட்டும்ட இல்லையென்றால் பாரத தேர் என்றைக்கோ தடுமாறி விழுந்திருக்கும். உடனே எழுந்துக் கொள்ளுங்கள். பக்கத்தில் இருப்பவரிடம் உங்கள் அன்பைச் சொல்ல.



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, May 9, 2013

வீரம் தமிழனின் கலாச்சாரம்.

வீரம்

தமிழனின் கலாச்சாரம்.

ஆனால் இன்றில்லை..அந்த வீரம் இன்றைக்கு வன்முறைக்குள் அடங்கிவிட்டது.

புறநானுறு என்கிற புறவியலில் தமிழர்களின் வீpரமும்,அஞ்சாமையும் அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

புறமுதுகில் புண்வாங்குபவன் கோழை என்றும்,போர்க்களம் கண்டு கலங்குபவன் வீரமில்லாத ஏழை என்றும் பரிகாசம் செய்யப்பட்டிருக்கிறது.
வீரமில்லாத இதயம் துடிக்க தகுதியற்றது.


அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்று கோழைகளை கடிந்துக் கொள்கிறார் பாரதி.

அச்சமில்லை அச்சமில்லை என்று மனதிற்கு உயிர் கொடுக்கிறார் பாரதி.
உடலால் உறுதிப்பட்டவர்கள் மட்டுமல்ல வீரன்..
உள்ளத்தாலும் உறுதிப்பட்டவர்கள்தான்.

உடலுறுதிக் கொண்டவன் கூட சில நேரம் துவண்டு விடுவதுண்டு…ஆனால் உள்ளத்தில் உறுதிக் கொண்டவர்கள் ப+மியை போல் சுற்றிக் கொண்டே இருப்பவர்கள்.

பயம் என்ற வார்த்தை அவர்களுக்கு தெரியாது.
அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

சேகுவாரா, லெனின்,பிடல் காஸ்ட்ரோ பெரியார், பிரபாகரன், ஹிட்லர்,சர்ச்சில்,இன்னும் பலபேர்.

காங்கோ காடுகளில் சுற்றித்திரிந்து போராளிகளின் ரத்தத்தை மறு சுத்தகரிப்பு செய்துக் கொண்டிருந்த சேகுவரா ஒரு வீரன்.

எவன் தொட்டால் தீட்டு என்றார்களோ அவன் தானே இந்த நாட்டடின் சட்டத்தை தீட்டோ தீட்டென்று தீட்டினான். தூழ்த்தப்பட்டவனை நாயை விட கேவலமாக நடத்திய நாட்டில் அரசியலைமைப்பு சட்டத்தையே எழுதிpக் கொடுத்த அம்பேத்கார் ஒரு வீரன்.

ஒரு சாதாரண ஓவியன் ராணுவ சிப்பாயாகி, தலைவனாகி நாட்டின் சர்வாதிகாரியாக மாறிக் காட்டிய உலகத்தின் பாதியை தன் சுட்டு விரலுக்குள் அடக்கிக் காட்டிய ஹிட்லர் ஒரு வீரன்.

அகிம்சை என்கிற கூட்டுக்குள்தான் யாரையும் அடிபணிய வைக்கும் அன்பு அடைகாக்கப்படுகிறது. என்பதை உணர்த்திய காந்தி ஒரு வீரன்.

சகலரும் கண்டு நடுங்கிக்  கொண்டிருந்த அலெக்சாண்டரை… “வா நீதானா அது?” ஏன்று சாதாரணமாக எதிர்த்து, போரில் தோற்றுப் Nபுhன போரஸ் ஒரு வீரன்.

இங்கே தோற்று போவது என்பது தோல்வியல்ல..

வெற்றி கனிகளை மூடி வைத்து இருக்கும் சூட்சும ப+க்கள்.

மூடப்புதர்களால் மறைத்து வைக்கப்பட்ட மனித அறிவை? சுத்தப்படுத்தி வெள்ளையடித்த ஈரோட்டு கிழவன் ஒரு வீரன்.

முதலாளித்;துவத்தை வேரோடு களைந்து சமத்துவத்தை நிலைநாட்டி, ஆதிக்க சக்திகளை அடிமண் வேரோடு பிடுங்கி எறிந்த நிலக்கிழார் பிடல் காஸ்ட்ரோ ஒரு வீரன்.

எண்ணங்களில் செயல்களில் நல்லவற்றுக்காக பேதாராடுபவன் எசனும் வீரனே..

இங்கே வீரன் என்பது உடல் தசைகளில் இல்லை.இதயத்தில்.

தன் கண் முன்னால் நடக்கும் அக்கிரமங்களை கண்டு கொதித்தது எழுபவன் தான் வீரன்.  எங்கே ஒழுக்கம் குடியிpரு;க்கிறதோ அங்கேதான் விPரமும் புதைக்கப்பட்டிருக்கிறது.

ஒழுக்கம் இல்லாதவன் ஒருக்காலும் வீரனாக பதிணமிக்கவே முடியாது. மனசாட்சியை மறந்து விட்டு முரடனாக கள்வனாக கொலைகாரனாக இருப்பவன் வீரன் இல்லை.

குடல் பசியை தீர்ததுக் கொள்ள வேட்டையாடும் காட்டு மிராண்டிகள் வெறி நாய்கள்.

அறிவோடும் கருணையோடும் இழைந்தோடும் ஒரு மின்சாரம் தான் அந்த வீரம்.

அது கொடியோரை சுட்டெரிக்க வேண்டும்.நல்லோரை தொட்டணைக்க வேண்டும்.

வீரமுடன் வாழ்வதற்கு சபதம் ஏற்போம்.

நாட்டிலுள்;ள கொடுமைகளை அறுத்தெறிய கைக் கோர்ப்போம்.
 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

காதல்

காதல்

எந்த ஒரு மனிதனையுமே விட்டு வைக்காத ஒரு உணர்வு இது.

சராசரியாக 16 வயதினிலேயே பல மனக் கிளைகளில் இது வந்து அமர்ந்து விடுகிறது.

பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படுகின்ற ஒரு இனக் கலவரம் ஒரு ஈர்ப்புவிசை.

கனவுலகை காட்டுகின்ற அதிசய உணர்வு.

எல்லோருக்ககும் காதல் வருகிறது. ஆனால் அத்தனை பேரும் காதலிப்பதில்லை.

காதல் என்பது காட்டாற்று வெள்ளம். அதில் கரை சேர முடியாமல் குறைப்பட்டு போனவர்கள் ஏராளம்.

எகிப்து நாட்டின் இளவரசி கிளியோட்பாட்ராவை அழகையெல்லம் பிரம்மனால் அள்ளிக் கொடுக்கப்பட்ட அந்த அழகு தேவரைக்கும் காதல்; வந்தது. ஆண்டனி என்கிந்ற படைத்தளபதியிடம் தன்னை இழந்தாள். ஆண்டனியும்சதா அவள் நினைவுகளிலேயே கட்டுண்டு கிடந்தான்.

எதிரி படையுடன் போர் புரிந்தபோது தன் நினைவுகளையும், உணர்வுகளையும் இழந்ததன் காரணமாக தோற்றான். வெட்டுண்டான். இறந்து போனான்;. இதை கேள்விப்பட்ட கிளியோட்பாட்ரா அவனில்லாத இந்த உலகம் எனக்கு தேவையில்லை என்று விசம் மிக்க விரியன் பாம்பை தன் மார்பில் மீது படரவிட்டு மடிந்து போனாள்.

அம்பிகாபதி என்கின்ற கவிஞன் அமராவதி என்கின்ற இளவரசியை காதலித்தான். புல்லருவிகள் இடைமறித்ததன் விளைவால் சேர முடியவில்லை. காதல் சமாதியாக்கப்பட்டது.

ரோமியோ, ஜூலியட், லைலா-மஜ்னு,தேவதாஸ்-பார்வதி,இப்படி எந்த ஒரு காதல் ஜோடியும் இணைந்து வாழ்ந்த சரித்திரம் இல்லை.

ஏன் காதலுக்கு இந்த சோதனை.?

ஒன்று-இருவருக்கும் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு

இரண்டு- சமுதாய ஏற்றத்தாழ்வு.

சமுதாய பொருளாதார நிலையில் இருவருக்கும் சமமான இடமிருந்தால் இணைப்பு என்பது சாத்தியம்.

ஆனால் காதல் அப்படி உருவெடுப்பதில்லையே?

தாழ்த்தப்பட்ட மதுரைவீரனுக்கும்,உயர்ந்த சாதி பொம்மிக்கும் தானே காதல் வருகிறது.

வறுமையில் வாடிய கவிஞனுக்கும்,மாளிகையில் வசிக்கும் அமராவதிக்கும் தானே காதல் வருகிறது.

பிறகு எப்படி சாத்தியமாகும்.?

வரலாற்று சுவடுகளை திரும்பி பார்க்கும் போது,சில தேவைகளுக்காக காதல் பயன்பட்டடிருக்கிறது.

ஒன்று இலக்கியம் எழுதப்படுவதற்காக…

இன்னொன்று சாதிய ஏற்றத்தாழ்வுகளை சமமாக்குவதற்காக…

முதல் ஒன்றை நாம் சாதித்து விட்டோம். இரண்டாவதுதான் சாத்தியமாக்க முடியவில்லை.

இலக்கியத்தில்  காதல் என்பது புனையப்பட்டதாக இருக்கலாம்.

ஏனென்றால் அது படிப்பவர்களின் உணர்ச்சியை கிளறிவிடுவதற்காக…
அது அதை எழுதும் ஆசிரியரின் சுயநலம்.

அந்த உணர்ச்சி கிளறல்களின் வாயிலாக நமது நெஞசத்தில் எங்கோ அடைந்து கிடக்கிந் காதலை நாம் அடையாளம் காணுகின்றோம்.. இன்பாம் கொள்ளுகிறோம்.

அதனால் காதல் இலக்கிய காவியங்களில் வெற்றி பெறுவது என்பது பெரிய விடயமில்லை.

ஆனால் சாதிய ஏற்றத்தாழ்வுகளை சமமாக்குதல் என்பதில் தான் நாம் கண்ட தோல்வி;.

சுற்றத்தாரும், உற்றதாரும் காதலை ஏற்பதில்லை. யாரோ சில சுயநலமிகளால் கொய்யாக புனையப்பட்ட சாதிய கட்டமைப்புகளிலிருந்து இறங்கி வர மறுக்கிறான்.

இதுதான் நாம் கண்ட தோல்விக்கு விள்ளையர் சுழி.

ஆனால் இ;னறைக்கு காதல் என்பது காமத்திற்குள் அடைப்பட்டு விட்டது.

காதலின் புனிதம், புரியாதவர்கள்தான் காதலிப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். மீசை முளைக்காத பையனுக்கும் வயதுக்கே வராத பெண்ணுக்கும் இன்றைக்கு காதல் வருகிறது.

அது காதலா, இல்லை

உணர்வுகளை தேடிக் கொள்கிற உடலாசையை தனித்து கொள்கிற ஒரு கருவி.

பொருளாதாரமே இல்லாதவனுக்கு காதல் வந்து பயனில்டலை.

சொந்த காலில் நின்று தன்னையே காப்பாற்ற தெரியாவதவனுக்கு காதல் தேவையே இல்லை. அந்த எண்ணமே வரக்கூடாது.

ஆனால் இன்றைக்கு நாம் காணுகிற நிலமையே Nவுறு.

பள்ளிகளில் விடுமுறைச் சொல்லிவிட்டு கோயில் படிகடடுகளில் கட்டுண்டு கிடப்பவர்கள்.

கல்லூரி கல்வியை ஒதுக்கி வைத்துவிட்டு, காம கலவியை தேடும் வக்கிர சோடிகள்…

எழும்புத்துண்டை தேடும் நாயைப் போல உடலுக்கு தீனி போட, புதர்களையும் ,மர மறைவுகளையும் தேடும் வக்கிர காமுகர்கள்.

இப்படித்தான் இவர்கள் காதலிப்பதால் பயன் ஏதாவது உண்டா,?

உள்ளங்கள் இணையாமல் உடல் மட்டும் அணைவதால் வாழ்வுக்கு பொருளுண்டா,?
 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, May 8, 2013

பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை (3)


இந்த ரெனால்டு இருக்கிறானே! எமபாதக பைய. கிரிக்கெட் பேட்டை தூக்கிட்டான்னா சும்மா நம்ம லிட்டில் பேட்ஸ்மேன் மாதிரி சுத்தி சுத்தி அடிப்பான். எனக்;கு அவனப்பாத்தா வெக்க வெக்கமா வரும். அட நம்ம வயசுப் பைய நல்லா விளையாடுறான். ஏன் நம்மளால விளையாட முடியல ன்னு ரொம்ப வருத்தமா இருக்கும்.



சரி…நாமளும் விளையாட பழகுவோம் ன்னு முடிவுப் பண்ணி, வீட்டுல பேட் ஒண்ணு வாங்கித்தாங்கன்னு கேட்டா,அட போடா…போய் படிக்கிற வழியைப் பாருன்னு திட்டி அனுப்பிச்சுட்டாங்க. சரி…விடு..நாமளே ஒரு பேட்டை செய்வோம் அப்படின்னு,வீட்டுக்கு பின்னாடி இருந்த விறகு கட்டை ஒண்ணை எடுத்தேன்.நல்ல நாட்டுக்கட்டை…அது எந்த மரம் ன்னு எல்லாம் எனக்கு தெரியல. அப்பத்தான் வாங்கி வைச்சுருந்த நல்ல வெட்டுக் கத்தியை கொண்டு வந்து,மரத்தை பேட் மாதிரி செஞ்சுட்டேன். அட சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப அருமையா வந்திருந்தது. அப்புறம் அது மேல ஆயில் தடவுனா சும்மா பந்து சு விங்ன்னு பறக்கும் யாரோ சொன்னாங்கன்னு வீட்டுல வைச்சுரந்த தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டரை எடுத்து நல்லா பேட்டுல தடவி, வெயில்ல காய வைச்சு,பளபளன்னு ஆக்கிட்டேன்.

அப்போல்லாம், ஞாயிற்றுக்கிழமையெல்லாம் நிறைய நண்பர்கள் கிரிக்கெட் விளையாட, அங்கிருந்த பள்ளிக்கூடத்திற்கு வருவாங்க. 5 ரூபாய்க்கு  பெட் மேட்ச் ன்னு வைச்சு, ஏதோ உலகக்கோப்பைக்கு விளையாடற மாதிரி ரொம்ப வெறித்தனமா விளையாடுவாங்க.

அப்போ நானும் ரெனால்டும், ஏண்டா நாமளும் நம்ம நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கிரிக்கெட் டீமை உருவாக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணி,லகான் இந்தி படத்தில் வர்ற மாதிரி, ஏதோ கொஞ்சமாச்சும் கிரிக்கெட்டை பத்தி தெரிஞ்ச நண்பர்களை சேர்த்துக் கொண்டு,பு ஊ து ஊ (பரனயடரச உசiஉமநவ தரnழைச உடரடி) ன்னு பேர் வைச்சு, சும்மா அமர்களம் பண்ண தயாரானோம்.

அப்போ கத்துக்கிட்டது தான் இந்த கிரிக்கெட். முதன்முதலில் பவுலிங் பண்ண சொன்னபோது, கை சுத்த தெரியாமல்,பாலை த்ரோ பண்ணிட்டு திரிஞ்சேன். எல்லாரும் என் பவுலிங்கை பத்தி கிண்டல் பண்ண ஆரம்பிச்சவுடன் நானே வெறிக் கொண்டு,எங்க வீட்டு மொட்டை மாடியில இருக்கிற சுவற்றுல மூணு கோட்டை ஸ்டெம்பு மாதிரி வரைஞ்சு,பவுலிங் பண்ண ப்ரேக்டீஸ் எடுத்தேன்.
சும்மா சொல்லக்கூடாது. நல்லா பவுலிங் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் நான்தான் எங்க டீமோட ஓபனிங் பவுலர். அவுட்சிங் பவுலிங் நல்;லா வந்ததனால, சீனியர் கிளப்பின் அண்ணன்கள் கூட எனக்கு ரசிகர்களா ஆகிட்டாங்க.

ஒரு சமயம், எங்க டீமோட, போட்டி வைச்சுக்கலாமான்னு அட்டி டீம் கேப்டன் சுப்ரமணி கேட்டுக் கொண்டதுக்கிணங்க நானும் எனது டீமும் பயங்கரமா ப்ரேக்டீஸ் பண்ண ஆரம்பிச்சோம்.

யாராருக்கு என்னென்ன பொசிசன். எப்படியெல்லாம் பாலை தடுக்கணும், அடிக்கணும்ன்னு ரெனால்டு சொல்லித்தர ரொம்ப மெனக்கெட்டு கத்துக்கிட்டோம். சும்மா சொல்லக் கூடாது, நான் பண்ணுன ஆயில் பேட் பயங்கரமா செட் ஆயிருந்தது. பாலை தொட்டாலே போதும் சும்மா விய்ங்ன்னு பவுண்டரியில போய் விழுகும். கைதான் அடிக்கும்போது வைப்ரேசன்ல கிடுகிடுன்னு ஆடும். அதுக்கப்புறம் என் பேட்தான் எங்க டீமோட வேவரட் பேட்.

சுப்ரமணி டீமுல இருக்குற எல்லோருமே காட்டான்கள். ஏதோ பாலை தொடற மாதிரிதான் இருக்கும். ஆனா பறக்கும்.எல்லாம் டீ எஸ்டேட்டுல இருந்த நண்பர்கள். அவங்களோட விளையாடுறது எங்களுக்கு ஏதோ பாகிஸ்தான் கூட விளையாடுற மாதிரி.

அன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. அன்னைக்குத்தான் எங்களுக்கும், அட்டி டீம்முக்கும் மேட்ச். பெட் 10 ரூபாய்.

எங்க அப்பா என்கிட்ட கேட்டார். ஏண்டா பேட்டை தூக்கிட்டு விளையாட போறேன்னு போறியே..ஜெயிட்டு வர்றியா? தோத்துட்டு வர்றியா? 

எனக்கு வந்தது பாருங்க கோபம். என்ன நினைச்சுட்டீங்க என்னைப்பத்தி. நான் தான் எங்க டீமோட நம்பிக்கை நட்சத்திரம். ஓபனிங் பவுலர். வேணும்னா நீங்க இன்னைக்கு வந்து பாருங்க. நான் எப்படி விளையாடுறேன்னு. 

சரி வர்றேன்னுட்டாரு எங்க அப்பா.

சரி நீங்க வந்துட்டீங்கண்ணா..எனக்கு ஒரு உதவி செய்யனும். முதல் இன்னிங்ஸ் முடிஞ்சதுக்கப்புறம் எங்களுக்கு பெப்ஸி வாங்கித்தரணும். சரியா?

பெப்ஸி ன்கிறது வேற ஒண்ணுமில்ல. அங்க இருக்குற பக்கத்துக் கடையில, ஒரு பாலித்;தீன் (ஆவின் கவர் மாதிரி சின்னதா இருக்கும்)கவர்ல பாலையும் சக்கரையும் போட்டு ப்ரிட்ஜ் வைச்சுருவாங்க. அதை வாங்கி சும்மா ஐஸ் மாதிரி சாப்பிடுவோம். காசு வெறும் 25 பைசா தான்.

மேட்ச் ஆரம்பிச்சாச்சு. நாங்க பவுலிங் எடுத்தோம். நான் தானே ஓபனிங் பவுலர். வழக்கம் போல 15 அடியை கணக்கில் எடுத்துக்கிட்டு,அங்கிருந்து ஓடி வந்தேன். அப்பா அப்படி ஓரமா உட்கார்ந்துக்கிட்டு இருந்தாரு. ஆமாம் பாஸ் அவர் மட்டும்தான் அங்கிருந்த ஆடியன்ஸ். 

என்ன நடந்ததுனே தெரியல. முதல் பாலே புல்டாஸ் ஆகி,நேரா ஸ்டெம்பை பதம் பார்த்துருச்சி. நான் வேற யாரையும் பார்க்கல. நேரா எங்க அப்பாவைத்தான் பார்த்தேன். சிரித்தார்.

ரொம்ப சந்தோசப்பட்டேன். ஆமாம் பாஸ். என்னதான் இருந்தாலும்…ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை நல்ல பௌலர் என்று கேட்ட தகப்பன். அதனால.



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Friday, May 3, 2013

பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை (2)



அதுல எப்போ பார்த்தாலும் கார் ரேஸ்,பழைய காலத்து இந்திபபடம் ன்னு அது பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும். மகாபாரதம்…ன்னு சங்கு சத்தம் ஆரம்பிச்சு, சும்மா நம்மளை ஒரு சரித்திர புலியா ஆக்கினது எல்லாமே அந்த டிவிதான். என்ன அப்ப இந்தி மொழில தான் மகாபாரதம் வந்தது. மகாபாரம் ஏதோ மழைகாலத்துல நடந்த மாதிரி தெரியும். 

ஆமாம் பாஸ்  அவ்வளவு கிரைன்ஸ். ஆனாலும் காஞ்சு போன மாட்டுக்கு பழைய புல்லா இருந்தாலும் அது பிரியாணித்தானே பாஸ். வுpடாமல் பார்த்துக்கிட்டே யிருப்பேன்.

ஸகூல் விட்டு வந்த உடனே அம்மா நான் ரெனால்டு வீட்டுக்கு போயிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு,அம்மா என்ன சொல்ல போறாங்களோன்னு அவங்க பதிலக் கேட்கக்கூட நேரம் கொடுக்காம நான் பாட்டுக்கு விர்ருன்னு கிளம்பிருவேன். அவ்வளவு டிவி பைத்தியமா மாறிட்டேன்.



கிரிக்கெட்டைப் பத்தி தெரிஞ்சுகிட்டதே அந்த டிவியைப் பார்த்துதான். நான் ஒரு சுயம்பு பாஸ்.

கிரிக்கெட்டில் நான் பைத்தியமா திருஞ்சது ஒரு தனிக்கதை. அதை அப்புறமா சொல்றேன்.

சாயங்காலம் 5 மணிக்கு போனேன்னா, 7 மணி வரை டிவிதான். அட…இது நம்ம வீடு இல்லையே..பிரெண்டோட அம்மா என்ன நினைப்பாங்களோன்னு நான் கொஞ்சம் கூட வெக்கப்படல…வேதனைப்படல.

ஆனா பாருங்க பாஸ்..சரியா 7 மணி யானா போதும்….அவங்க அப்பா வந்துருவாரு. அவரு வந்த உடனே சரிப்பா நீ கிளம்பு ன்னு சொல்லி டிவியை ஆப் பண்ணிருவாரு.

எனக்கா…இந்த ஆளு ஏய்யா வந்து வந்து தொல்லை பண்றான்னு கோபமா இருக்கும். என்ன பண்றதுன்னு சொல்லி உடனே கிளம்பி வீட்டுக்கு வந்துடுவேன்.

எங்க அம்மா பாத்தாங்க….ஆகா இவனை இப்படியே விட்டுடோம்னா இவன் பிரெண்டு வீட்டுல மானம் கெட்டு,நம்ம மானத்தையும் கெடுத்துருவான்னு சரியா முடிவை எடுத்து, சரி நம்மளே ஒரு டிவியை வாங்கி வைச்சுருவோம் ன்னு அது சம்மந்தமா அப்பாக்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க.

அதை வாங்கலாம்…இதை வாங்கலாம் ன்னு எதை எதையோ டிஸ்கஸ் பண்ணி கடைசில ஒரு பிளாக் அண்டு வொயிட் போர்ட்டபிள் டிவியை வாங்கினாங்க…அன்னைக்கு பாவம் எங்க வீட்டுல அதுதான் முடிஞ்சது. 
வீட்டுல டிவி வந்த உடனே நான் பட்ட சந்தோசம் இருக்கே…அப்பப்பா…
பக்கத்து வீட்டுல, பார்க்கிற பிரெண்ட்ஸ்கிட்டன்னு எல்லாத்துக்கிட்டயும் டேய்…எங்க வீட்டுல டிவி வாங்கிட்டோம்… டிவி வாங்கிட்டோம்…ன்னு பெருமை கிழிய சொல்லிக்கிட்டு இருந்தேன்.

இப்ப வீட்டுலயே டிவி வந்துட்டனால நான் ரெனால்டு வீட்டுக்கு போறதே இல்ல. அவன பாத்தாக்கூட பேசறது கூட இல்ல. அவனுக்கு புரிஞ்சு போச்சு…. ஆகா இவன் சரியான பச்சோந்தி பைய. டிவி வந்த உடனே இந்த பாவியை மறந்துட்டானே ன்னு…

அப்புறமா நான் இந்த டிவில கத்துக்கிட்டது ஏராளம். சும்மா டிவி முன்னாடியே உக்காந்துகிட்டு, பாசை புரியுதோ இல்லையோ…என்னமோ புரிஞ்சுக்கிட்ட மாதிரி தலையாட்டிக்கிட்டு,சிரிச்சுக்கிட்டு இருப்பேன்.

அப்படி ஒரு வாழ்க்கையை நாம எல்லோரும் மிஸ் பண்ணியிருக்க மாட்டோம் இல்லைங்களா பாஸ்….

சரி அடுத்ததா நான் கிரிக்கெட் கத்துக்கிட்ட சுவாரஸ்யமான விசயம் ஒண்ணு இருக்கு….நாளைக்குச் சொல்லவா…?


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.